மணிமேகலை
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென மணிமேகலை வெளியேறினார். இதற்க்கு காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.
அவர் கர்ப்பமாக இருக்கிறார், அது தான் காரணம் என்று ஒரு புறமும், மணிமேகலைக்கும் விஜய் டிவி குழுவிற்கும் ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் என்று மறுபுறமும் கூறப்பட்ட வருகிறது. ஆனால் இது எது உண்மை என்று தெரியவில்லை.
சம்பளம்
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை இந்த நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி குக் வித் கோமாளி ஒரு எபிசோடிற்கு ரூ. 60 ஆயிரம் வரை சம்பளமாக வாங்கி வந்துள்ளார் மணிமேகலை என தகவல் தெரிவிக்கின்றனர்.