கிளிநொச்சி பூநகரி நல்லூர் பகுதியில் மகாவித்தியாலத்தின் முன் உள்ள பூநகரி வரவேற்பு வளைவின் துாணில் ஹயஸ் வாகனம் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது,
யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் கிளிநொச்சி பூநகரி நல்லூர் பகுதியில் உள்ள குறித்த பிரதேசத்தை வரவேற்கும் சீமெந்தினால் கட்டப்பட்ட வளைவுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.