ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவின் தாயார் ஷிராணி விக்கிரமசிங்க இன்று (08) காலை காலமானார்.
அவரது தற்போது பூதவுடல் கொழும்பு ஜயரத்ன மலர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக்கிரியைகள் நாவல பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஷிராணி விக்கிரமசிங்க ஒரு பிரபல தொண்டாளர் என்பதுடன் நாவல ஜனாதிபதி பெண்கள் கல்லூரிக்கு முழு நிலத்தையும் நன்கொடையாக வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.