வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் தந்தை தனது மகனை சவரக் கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பசறை கோனகெலே தோட்டத்தில் 18 வயதுடைய மகனே இவ்வாறு கத்திகுத்துக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தந்தை
பசறை கோனகெலே வத்தை ரெண்டபொல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இச் சம்பவத்தை செய்துள்ளார்.
இடது கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயங்களுடன் புதல்வர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.



















