அண்மையில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய ஒருவரின் பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த விலை மாது ஒருவரும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதன்படி குறித்த நபரிடம் இருந்து 70,000 ரூபா பணம், கைத்தொலைபேசி, அடையாள அட்டை, வங்கி அட்டை போன்றன திருடப்பட்டுள்ளதாக குறித்த நபர் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸில் முறைப்பாடு
முறைப்பாடு செய்தவர் வெளிநாட்டிலிருந்து வந்த பின்னர் இரண்டு முறை பணத்திற்கு விற்கப்படும் பெண் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் முறைப்பாட்டாளரின் அழைப்பின் பேரில் வந்த சந்தேக நபரான பெண், தனது நண்பர் கரடியானா பகுதியில் இருப்பதாகத் தெரிவித்ததை அடுத்து கரடியானா குனு கந்த பகுதிக்கு தனது காரை ஓட்டிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றைக் காட்டி தனது நண்பர் இருப்பதாகக் கூறி காரை அருகில் நிறுத்துமாறு முறைப்பாட்டாளரிடம் அப்பெண் கூறியுள்ளார்.
காரை அருகில் நிறுத்தியவுடன் அதிலிருந்து இறங்கிய இருவர், முறைப்பாட்டாளரைத் தாக்கி பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொரலஸ்கமுவ வெரஹெர தோட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் சம்பவம் தொடர்பில் மேலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இந்த மோசடி தொடர்பில் கல்கிஸ்ஸ பிரதேச குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.