யாழ்.மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை தொடக்கம் ஒரு றாத்தல் பாணின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டு 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி குணரட்ணம் இதை தெரிவித்தார்.
வெதுப்பக உற்பத்தி பொருட்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.