கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்த சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான செல்லையா சதீஸ்குமார் விடுவிக்கபப்ட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட சதிஸ்குமார் சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
மெகசின் சிறைச்சாலை
சதிஸ்குமாரின் விடுதலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கடிதம் இன்றைய தினமே(வெள்ளிக்கிழமை) மெகசின் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தே அவர் சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விவேகானந்த நகர் கிழக்கு, கிளிநொச்சியை வாழ்விடமாகக் கொண்ட சதீஸ்குமார், நெருக்கடிகள் மிகுந்த யுத்த காலங்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி ஓட்டுநராக உயிர் காப்புப் பணியில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வந்திருந்தார்.
அதன்பின்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு பணியின் நிமித்தம் கிளிநொச்சி வைத்திசாலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது, வவுனியா- தேக்கவத்தை சோதனைச் சாவடியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.