900 சுற்றுலா பயணிகள் மற்றும் 463 பணியாளர்களுடன் ”வைக்கிங் நெப்டியூன்” என்ற அதிசொகுசு பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
நோர்வேயின் 227 மீற்றர் நீளமான குறித்த அதிசொகுசு பயணிகள் கப்பல் இன்று (25.03.2023) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
தாய்லாந்திலிருந்து இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகள்
இந்த நிலையில் தாய்லாந்திலிருந்து இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் நாளை வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அக்காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, கண்டி, காலி, பெந்தோட்டை, பின்னவல போன்ற இடங்களை பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.