தங்காலை வெலியார நெதோல்பிட்டிய பிரதேசத்தில் அரச விவசாய உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
30 வயதுடைய நபரையே இன்று அதிகாலை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதோல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் இன்று பணிக்கு சென்றிருந்த போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்தது
நேற்று முன்தினம் அப்பகுதி விவசாய அலுவலகத்தில் அதிகாரியுடன் ஏற்பட்ட தகராறில் அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.