தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இரு ரஸ்ய பிரஜைகள் உள்ளிட்ட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
ஹோமாகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ரஸ்ய பிரஜைகள் பயணித்த வான் வண்டியும், லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில்
25 வயதான வாகனத்தின் சாரதியும், 59 வயதான ரஸ்ய ஆண் ஒருவரும், அதே வயதுடைய ரஸ்ய பெண் ஒருவரும் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.