ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் திகதி தொடக்கம் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 16.55 டொலர்களாக உயர்வடைந்துள்ளது.
தற்பொழுது ஒன்றாரியோ மாகாணத்தில் குறைந்தபட்ச சம்பளமாக மணித்தியாலம் ஒன்றுக்கு 15.50 டொலர்கள் வழங்கப்படுகின்றது.
இந்த தொகை 6.8 வீதத்தினால் உயர்த்தப்பட்டு 16.55 டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
வாரத்திற்கு 40 மணித்தியாலங்கள் பணியாற்றும் ஒருவர் இந்த சம்பள அதிகரிப்பு மூலம் வருடமொன்றுக்கு 2200 டொலர்கள் கூடுதலாக சம்பளம் பெற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மணித்தியால சம்பளத்தை குறைந்தபட்சம் 20 டொலர்களாக உயர்த்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.