கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தம் தாமதமானமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கினால், விடைத்தாள்களை உடனடியாக சரிபார்க்கும் பணியை ஆரம்பிக்க தயார் என அதன் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னஹக்க தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த உயர்தரப்பரீட்சை விடைத்தாள் திருத்தத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளோம் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
இந்த வரிக் கொள்கையால் அநீதி இழைக்கப்படும் எங்கள் உறுப்பினர்களுக்கு கொஞ்சம் நிவாரணம் தேவை என்ற அடிப்படையில், இதனுடன் வேறு எந்த கோரிக்கையும் இணைக்கப்படவில்லை. அதேநேரம் இனவாதப் பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கின்றன.
சிங்கள மொழியில் விடைத்தாள்களை திருத்தாது, தமிழ் மொழி மூல விடைத்தாள்களைப் சரி பார்க்கிறார்கள் என்று. மிகுந்த பொறுப்புடன் அறிவிக்கிறேன்.
அது நடக்காது. இங்கு சிங்கள, தமிழ் பேச்சு கிடையாது. இதில் பங்கேற்காத அனைவரும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மட்டுமல்ல, பாடசாலை ஆசிரியர்களும் இதில் பங்கேற்கவில்லை.
எனவே, இந்த நிலை தொடர்வதற்கு நாங்கள் பொறுப்பல்ல. எனவே பொறுப்புடன் சொல்கிறோம். அரசு சாதகமான பதில் அளித்தால், எந்த நேரத்திலும் இப்பணியை துவக்க தயாராக உள்ளோம்.
இதற்கு இன்றே தீர்வு கிடைத்தால், நாளை முதல் விடைத்தாள்களை பார்க்க எங்கள் உறுப்பினர்கள் தயாராக உள்ளனர்.