இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவர்களில் ஒருவர் மற்றவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் மினுவாங்கொடையில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தொடர்பிலான தகவல்
42 வயதுடைய ராஜபக்க்ஷ ஆராச்சிகே விஜேசிறி என்ற தெவலவத்த பிரதேசத்தில் வசித்து வந்தவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரும் உயிரிழந்த நபரும் மதுபோதையில் கடை ஒன்றுக்கு அருகில் மோதலில் ஈடுபட்டிருந்தபோதே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




















