கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
மருத்துவக் குழாய் மற்றும் வைத்தியர்கள் அணியும் சீருடை, மற்றும் வைத்தியர்கள் பயன்படுத்தும் பல்வேறு நோய்கள் தொடர்பான புத்தகங்களையும் சந்தேக நபரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றினர்.
பலரிடம் மோசடி
கைதானவர் வைத்தியர்களின் உடை அணிந்து, மருத்துவர் போல் நடித்து பலரிடம் பணத்தை மோசடி செய்தாக கூறப்படுகின்றது.
தேசிய வைத்தியசாலை மற்றும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை வளாகத்தில் சுற்றித் திரியும் இந்தச் சந்தேக நபர் வைத்தியசாலைக்கு நோயாளர்களைப் பார்வையிட வருபவர்களிடம் தமக்குரித்தான ஆப்பிள் தோட்டத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் அவுஸ்திரேலியாவில் தனது மனைவி உள்ளார் எனக் கூறி அவரது பெயரை பயன்படுத்தி நீண்டகாலமாக நிதி மோசடி செய்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.