பிரித்தானியாவில் வேல்சில் அடுத்த 4 வருடங்களுக்கு சுமார் 900 தாதிகளை இந்தியா உள்பட வெளிநாடுகளில் இருந்து நியமிக்க அங்குள்ள சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
இதில் பெரும்பாலானோர் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் இருந்து தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிதியாண்டில் மட்டும் 350 வெளிநாட்டு தாதிகள் தேர்வு செய்ய வேல்ஸ் தேசிய சுகாதாரப்பணிகள் துறை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு தாதிகள் தேர்வு உடனடி மற்றும் அனுபவ அடிப்படையில் இருக்கும் என ஸ்வான்சீ பே பல்கலைக்கழக சுகாதாரத்துறை இயக்குனர் கரேத் ஹவல்ஸ் கூறியுள்ளார்.
இந்தியாவை தவிர பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் இருந்தும் நர்சுகளை பணியமர்த்த வேல்ஸ் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.