ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் ஸ்மார்ட்போனுடன் நார்ட் பட்ஸ் 2 மாடலை சில நாட்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் நார்ட் CE 2 லைட் மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகமாகி இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய நார்ட் CE 3 லைட் ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 11 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போனிற்கு வங்கி தள்ளுபடி அறிமுக சலுகையாக வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் புதிய நார்ட் CE 3 லைட் வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரத்து 999 மதிப்புள்ள ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் CE இலவசமாக வழங்கப்படும் என ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.
ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் அறிமுக சலுகைகள்: ஒன்பிளஸ் வலைதளம், அமேசான், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர், அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பார்ட்னர் ஸ்டோர்களில் புதிய நார்ட் CE 3 லைட் ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் CE இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் ஒன்பிளஸ் நார்ட் வாட்ச் மாடலை ஒன்பிளஸ் வலைதளம் அல்லது ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப்-இல் ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் வாங்குவோருக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதுதவிர ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் வாங்கும் போது ரூ. 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் விலை விவரங்கள்: இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பேஸ்டல் லைம் மற்றும் க்ரோமேடிக் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கார்டு, மாத தவணை மற்றும் நெட் பேங்கிங் பயன்படுத்தும் போது ரூ. 1000 வங்கி தள்ளுபடியாக வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் 5ஜி அம்சங்கள்: 6.72 இன்ச் 2412×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 3048/50/60/90/120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் அட்ரினோ 619L GPU 8 ஜிபி ரேம் 128 ஜிபி, 256 ஜிபி மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 13.1 ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் 108MP பிரைமரி கேமரா 2MP டெப்த் கேமரா 2MP மேக்ரோ கேமரா 16MP செல்ஃபி கேமரா பக்கவாட்டில் கைரேகை சென்சார் 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 யுஎஸ்பி டைப் சி 5000 எம்ஏஹெச் பேட்டரி 67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்