ரியல்மி நிறுவனத்தின் நார்சோ N55 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 12 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய நார்சோ N55 மாடலில் டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 33 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
இத்துடன் புதிய நார்சோ N55 மாடலின் பின்புறம் புளூ மற்றும் பிளாக் நிறங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதைத் தொடர்ந்து ரியல்மி வெளியிட்டு இருக்கும் புதிய வீடியோவில், நார்சோ N55 ஸ்மார்ட்போனில் முன்புறம் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் இதில் ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் போன்ற மினி கேப்சியுல் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே ரியல்மி அறிமுகம் செய்த C55 ஸ்மார்ட்போனிலும் இதே போன்ற மினி கேப்சியுல் அம்சம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. நார்சோ N55 மாடலின் முழு அம்சங்கள் மற்றும் டிசைன் உறுதிப்படுத்தப்பட்டு விட்டன. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி C55 மாடலின் மற்றொரு வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை நார்சோ N55 மாடலில் 6.72 இன்ச் Full HD+ 90Hz LCD ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0 மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் 64MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.