சித்திரைப் புத்தாண்டு காலத்தில் பட்டாசு வெடிக்கும்போது விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் சுற்றாடல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒலி எழுப்பும் சில பட்டாசுகள் விலங்குகளின் கேட்கும் உறுப்புகளை சேதப்படுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் வீட்டில் வாழும் சில விலங்குகள் பட்டாசு சத்தத்திற்கு பயந்து வீதியில் ஓடுவதுடன் விபத்துக்களில் கூட சிக்கும் வாய்ப்பும் காணப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.