ரஷியா தனது அராஜகத்திற்கான முழு விலையை உணர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.
ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றில் பேசும்போது சர்வதேச நாணய நிதியகம் மற்றும் உலக வங்கிகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
அதில் உலகம் முழுவதும் உள்ள ரஷியாவின் மத்திய வங்கியின் சொத்துகள் நிதிகளை முடக்க வேண்டும் என்றும் அவற்றை கொண்டு உக்ரைனை மறுகட்டமைப்பு செய்ய உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
உக்ரைனில் ஏற்பட்டு உள்ள இழப்புகளை ஈடுகட்டுவதற்காக இந்த நடவடிக்கையை ரஷியாவுக்கு எதிராக எடுக்கும்படி அவர் கேட்டு கொண்டு உள்ளார். ரஷியா தனது அராஜகத்திற்கான முழு விலையையும் உணர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர் வீடியோவில் பேசும்போது ரஷிய படையெடுப்பின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் ரஷியாவின் வெளிநாட்டில் உள்ள 6 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகளை முடக்கும் என அறிவித்தது.