கொழும்பு – கோட்டை மேம்பாலம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தினமும் ஏராளமாக மக்கள் பயணிக்கும் இந்த பாலம் பல இடங்களிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து கொழும்பு மாநகர சபைக்கு அறிவித்துள்ள போதிலும் பல தடவைகள் வந்து சேதமடைந்த இடங்களை அடையாளப்படுத்திவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து ஏற்படுவதற்கு முன்னர் சீரமைக்கவும்
எனினும், இதுவரை பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தினமும் அதிகளவான மக்கள் பாலத்தில் பயணிப்பதுடன், பாலத்தின் கீழ்ப்புறங்களில் பெருமளவானவர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
மேலும், கோட்டை தொடருந்து நிலையத்திற்கு வரும் ஏராளமான மக்கள் இந்த மேம்பாலத்தையே பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், உரியவர்கள் உடன் கவனத்தில் எடுத்து மேம்பாலத்தினை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, விபத்து ஏற்படுவதற்கு முன்னர் மேம்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதோடு, இதனை அலட்சியப்படுத்தினால் ஏதேனும் விபரீதங்கள் ஏற்படக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.