நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய தினம் (17.04.2023) விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலின் படி, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இந்த நிலைமை நிலவுவதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள்
இதன் காரணமாகப் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தேவையற்ற வெளியிடப் பயணங்களைத் தவிர்க்குமாறும் கூறியுள்ளது.
மேலும், தேவையான அளவு தண்ணீரை அருந்துவது மற்றும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுமாறும் வானிலை ஆய்வாளர் மலிந்த மில்லங்கொட பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















