மனைவியை கொடூரமா தாக்கி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹங்வெல்ல – தும் மோதர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கணவனின் தாக்குதலில் பலத்த காயமடைந்த மனைவி சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



















