இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 643,725 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.
இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 177,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 1 கிராம் தங்கத்தின் விலை 20,703 ரூபாவாகா காணப்படுகின்றது.
நேற்றைய தினம் 22kt தங்க விலை 166,650 ரூபாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.




















