அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர் தேக்கத்திலிருந்தே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓலிறூட் பிரதேசத்தில் நீரில் மிதந்தவாறு ஆணின் சடலமொன்று (30) இன்று காலை 11 மணி அளவில் தலவாக்கலை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் சடலத்தை நீதிமன்ற அனுமதியோடு மீட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



















