இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய் குணப்படுத்த முடியாத ஒரு நோயாகும். ஆனால் சில வீட்டு வைத்தியம் மூலம் இந்த பிரச்சனையை கண்டிப்பாக கட்டுப்படுத்த முடியும்.
பொதுவாக இன்சுலின் சுரப்பு குறைவாக இருந்தாலோ அல்லது இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டாலோ சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்சனை ஏற்படும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் வருகிறது. அந்த வகையில் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோயின் தன்மைகளையும் அதன் காரணங்களையும் புரிந்து கொண்டு உங்களது வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களைச் செய்தால் இந்த பாதிப்பிலிருந்து நீங்கள் பூரண குணமடையலாம் என கூறப்படுகிறது.
அதே சமயம் உணவில் மாற்றம் செய்வதன் மூலமும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம். அத்தகைய சூழ்நிலையில் இரத்த சர்க்கரை போன்ற ஆபத்தான நோயால் நீங்கள் இன்னல்களை சந்தித்தால் அன்றாட வாழ்க்கையில் இஞ்சியை சேர்த்துக் கொள்ளலாம்.
ஏனெனில் இஞ்சியை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயை சுலபமாக கட்டுப்படுத்தலாம்.
இஞ்சியின் மருத்துவ குணங்கள்
இஞ்சியில் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன.
இதனால் இது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக வைக்கவும் உதவுகிறது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இஞ்சியை இப்படி பயன்படுத்தவும்.
காய்கறிகளில் இஞ்சி சேர்க்கவும்
காய்கறிகள் சமைக்கும் போது ஒரு மசாலாப் பொருளாக இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம்.
இதன் மூலம் உணவை ஆரோக்கியமாக மாற்றலாம். மறுபுறம் நீரிழிவு நோயாளிகள் இந்த முறையில் உட்கொண்டால் உடலுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது.
இஞ்சி தேநீர் / இஞ்சி டீ
இஞ்சி டீ மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். இதைப் பயன்படுத்த சிறிது இஞ்சியை நசுக்கி, கொதிக்கும் நீரில் சேர்த்து தேநீர் தயாரிக்கலாம்.
அதன் பிறகு இந்த தேநீரை வடிகட்டி குடிக்கவும். இதனுடன் எலுமிச்சை மற்றும் தேனையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இஞ்சி மிட்டாய் / இஞ்சி மரப்பா
சர்க்கரை நோயாளிகள் இஞ்சி மிட்டாய் சாப்பிடலாம். இதற்கு இஞ்சியை அரைத்து அதில் சிறிது தேன் சேர்த்து அதிலிருந்து மிட்டாய் தயார் செய்யலாம்.
இந்த மிட்டாய் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட வேண்டும்.
இதைச் செய்வதன் மூலம் பல வழிகளில் பலன் கிடைக்கும். அதே நேரத்தில் இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.