இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக நாட்டிலுள்ள மில் உரிமையாளர்கள் அரசியின் கட்டுப்பாட்டு விலையை மீறி கீரி சம்பாவை விற்பனை செய்வதால் கீரி சம்பாவின் விலை 25 முதல் 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக அதன் தலைவர் டி.கே.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்த்தில் அரசாங்கத்தினால் பல்வேறு அத்தியவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்ட போதும் அதனை மீறி அதிக விலைக்கு ஏனைய பொருட்களும் விற்கப்படுவதை அவதானிக்க முடிக்கின்றது.
நாடு பொருளாதார ரீதியில் கங்குரோத்து நிலையை அடைந்துள்ள நிலையஜல் அதிகளவான அரச ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதுடன் இலங்கையிலுள்ள மக்கள் தொடர்ந்தும் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.