வட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் வைத்து விட்டு கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மல்லைநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் 30 வயதான பேக்கரி மாஸ்டரின் மனைவியே இச் செயலை செய்ததாக கூறப்படுத்திகின்றது.
இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 2 வருடங்களுக்கு முன் வர்ஷினி என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.
தம்பதி பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வரும் நிலையில் ஒரு வயதில் குழந்தை ஒன்றும் இவருக்கு உள்ளது. வர்ஷினி 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அவருக்கு வலிப்பு நோய் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குடும்பத்திற்கு தெரியவர, மாமனார் அதை மீண்டும் மீண்டும் கூறி கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதனால் மனமுடைந்த வர்ஷினி தனது வட்ஸ்எப் ஸ்டேடஸில் மாமனார், மாமியார் கொடுமைப்படுத்துவதால் தற்கொலை செய்து கொள்வதாக வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தனது மனைவியின் ஸ்டேடஸை பார்த்த கணவர் அதிர்ச்சி அடைந்து வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார்.
வீடு பூட்டப்பட்டு இருந்ததால் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
உள்ளே வர்ஷினி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த பொலிஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.