பிரான்ஸில் தோட்டங்களில் உள்ள நீச்சல் குளங்களின் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் மேற்குப் பகுதியில் நிலவும் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக இந்த தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
வறட்சி நெருக்கடிநிலை
எதிர்வரும் மே 10ஆம் திகதியன்று அங்குள்ள வறட்சி நெருக்கடிநிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்படும் என்று பிரான்ஸின் சுற்றுப்புற அமைச்சர் கூறினார்.
இதன் காரணமாக கார் கழுவுதல், தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுதல், நீச்சல் குளத்தை நிரப்புதல் ஆகியவையும் தடை செய்யப்படும் என கூறப்படுகின்றது.
நாட்டில் உள்ள வளங்களை சாமர்த்தியமாகப் பயன்படுத்தவேண்டும் தெரிவித்த அமைச்சர், தண்ணீர் நெருக்கடி நிலை ஏற்படும்போது நீரைக் குடிப்பதற்கு மட்டும் உபயோகிப்பது சிறந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.