சகோதரியின் வீட்டிற்கு தீ வைத்த இளைய சகோதரர் நேற்று (14) கைதாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர் வத்துபிடிவல ருக்கவில பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் சகோதரியின் பிள்ளையின் பாடசாலை புத்தங்கங்கள், சீருடைகள் மற்றும் உபகரணங்கள் நாசமாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று அத்தனுக்கல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.