சமையலறையில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் மருத்துவ பண்புகளைக் கொண்ட பல பொருட்கள் உள்ளன. அதில் பூண்டு மற்றும் கிராம்பு உடலில் பல மாயங்களை ஏற்படுத்தும்.
அதுவும் இவ்விரண்டையும் ஒன்றாக எடுக்கும் போது அதன் விளைவாக பல பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகள் கிடைக்கும்.
அதில் கிராம்பில் உள்ள உட்பொருட்கள் பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
கிராம்பில் உள்ள சத்துக்கள்
கிராம்பில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஜிங்க் மற்றும் கால்சியம் மட்டுமின்றி, வைட்டமின்களான சி, பி6, பி13, ஏ, ஈ, டி, கே, தயமின், ரிபோஃப்ளேவின், நியாசின், ஃபோலிக் அமிலம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.
பூண்டில் இருக்கும் சத்துக்கள்
அதேப் போல் பூண்டு பற்களை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள மருத்துவ பண்புகள் சுவாச தொற்றுகள், மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவுவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது.
முக்கியமாக இதில் உள்ள வைட்டமின் பி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
இவ்வளவு சத்துக்கள் மற்றும் மருத்துவ பண்புகளைக் கொண்ட பூண்டு மற்றும் கிராம்பை ஒன்றாக எடுப்பதன் மூலம் பலவித பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
இப்போது ஒவ்வொரு பிரச்சனைக்கும் பூண்டு மற்றும் கிராம்பை பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.
குடல் புழுக்கள் மற்றும் தொற்றுக்களை நீக்க
வயிற்றில் புழுக்கள் அதிகம் இருந்தால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். எனவே வயிற்றில் உள்ள புழுக்களை திறம்பட வெளியேற்ற வேண்டுமானால், இஞ்சி மற்றும் பூண்டை பொடியாக நறுக்க வேண்டும்.
பின் அதை ஒரு பாட்டிலில் போட்டு, அத்துடன் சிறிது பட்டைத் தூள் மற்றும் தேனை மூழ்கும் வரை ஊற்றி, அதை மூடி வைத்து 7 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.
குழந்தைகளாக இருந்தால் இந்த கலவையை காலையில் ஒரு சிறிய ஸ்பூனும், பெரியவர்களாக இருந்தால் காலை மற்றும் இரவு தூங்கும் முன் ஒரு பெரிய ஸ்பூனும் உட்கொள்ள வேண்டும்.
முக்கியமாக இந்த கலவை குடல் புழுக்களை அழிப்பதோடு உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கும்.
பல் வலிக்கு
பல்வலியால் அவதிப்படுபவர்களுக்கு பூண்டு கிராம்பு கலவை நல்ல நிவாரணத்தை அளிக்கும்.
அதற்கு இவ்விரண்டின் எண்ணெய்கள் அல்லது அவற்றை அரைத்து பயன்படுத்தலாம்.
அதுவும் பல் வலி கடுமையாக இருக்கும் போது, கிராம்பு மற்றும் பூண்டு பொடியை ஒன்றாக எடுத்து, அவற்றை டீ-பேக்கில் போட்டு கட்டி, பல் மற்றும் ஈறு வலிக்கும் போது அவ்விடத்தில் இந்த பேக்கை வைத்து கடிக்கும் போது, வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
சிறுநீரகங்களை சுத்தம் செய்ய
நமது உடலில் சிறுநீரகங்கள் கழிவுகளை வெளியேற்றும் முக்கிய பணியை செய்கின்றன. அப்படிப்பட்ட அந்த சிறுநீரகங்களில் அழுக்குகள் அதிகம் சேர வாய்ப்புள்ளன.
இந்த அழுக்குகளை வெளியேற்ற கிராம்பு, பூண்டு பெரிதும் உதவி புரியும். அதற்கு கிராம்பு மற்றும் பூண்டு பற்களைத் தட்டி ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதில் எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து பருக வேண்டும்.
சுவாச கோளாறுகளுக்கு
சுவாச பிரச்சனைகளை சந்திப்பவர்கள், அதிலிருந்து விடுபட பூண்டு மற்றும் கிராம்பை உட்கொள்ள நல்ல நிவாரணம் கிடைக்கும்.
அதற்கு 40 பூண்டு பற்களை எடுத்து, 100 கிராம்புகள் மற்றும் 1/2 லிட்டர் தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பூண்டு பற்களை தோலுரித்து, 100 கிராம்பை எடுத்து அதை 1/2 லிட்டர் தேனில் போட்டு, 10 நாட்கள் ஊற வைத்து, பின் அதை தினமும் காலை மற்றும் இரவு தூங்கும் முன் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.