கனடாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அனிஞ்சியன்குளம் மல்லாவியை பிறப்பிடமாக கொண்ட 39 வயதான நபரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
வீதியில் திடீரென பாய்ந்து ஓடிய மான் ஒன்றின் மீது வாகனம் மோதி நிலை குலைந்தே விபத்து ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.
இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்த நபர் கனடாவிற்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.