கனடாவில் பணவீக்கம் தொடர்பில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் பணவீக்க வேகம் 4.4 வீதமாக அதிகரித்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு பணவீக்க வீதம் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டு ஜுன் கனடாவின் பணவீக்க வீதம் 8.1 வீதமாக காணப்பட்டது.
மளிகைப் பொருட்கள், மரக்கறி வகைகள், எரிபொருள் போன்றனவற்றின் விலைகள் உயர்வடைந்துள்ளன.
எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் 3 வீதமாக குறைவடையும் என கனடிய மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.