இன்று (21) காலை பொரளை காதர் நானாவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கூரிய ஆயுதங்களுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர்களில் காதர் நானா வத்தே மல்லிய என்ற பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 8 வாள்கள், கத்திகள், போதைப்பொருட்கள், ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.