நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காலி மாவட்டத்தின் யக்கலமுல்ல, எல்பிட்டிய மற்றும் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.