தனது கருத்துக்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக்கோருவதாக போதகர் ஜெரோம் பொ்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பௌத்த, இந்து, இஸ்லாம் மதங்களைப் பின்பற்றுவோரிடம் குறித்த மதங்கள் தொடர்பாக தான் தெரிவித்த கருத்துக்கள் குறித்து மன்னிப்புக்கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிரிஹானைப் பிரதேசத்தில் அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆராதனைக் கூட்டத்தில் ஸூம் செயலி ஊடாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு திரும்பவுள்ளதாக அறிவிப்பு
அத்துடன் தான் விரைவில் நாடு திரும்பவுள்ளதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஜெரோம் பெர்னாண்டோவின் அறிக்கை தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதுடன், அந்த அறிக்கை புத்தரையும் ஏனைய மத நம்பிக்கைகளையும் அவமதிப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதன்படி, அவரது வாக்குமூலம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், வெளிநாட்டுப் பயணத்தடையையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
மேலும் அவரது சொத்துகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகின்றது.