தேவையான பொருட்கள் :
மட்டன் எலும்புடன் – அரை கிலோ மட்டன்
கொழுப்பு – 100 கிராம்
பச்சை மிளகாய் – 4
கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்
தக்காளி – 1 மஞ்சள்
தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான
அளவு கறிவேப்பிலை – 2 கொத்து
மசாலா அரைக்க : மரசெக்கு
கடலை எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் – 8
பூண்டு பற்கள் – 8 சீரகம்
, மிளகு – தலா 1 டீஸ்பூன்
செய்முறை * மட்டனை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிகொள்ளவும். * தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும். * ப.மிளகாயை விழுதாக அம்மிகல்லில் நசுக்கி கொள்ளவும்.
* ஒரு பிரஷர் குக்கரில் மட்டன், மட்டன் கொழுப்பை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மூடியை மூடி 4 விசில் வரை வேக வைக்க வேண்டும்.
* பின்னர் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து நைசாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.
* ஒரு அகலமான வாணலியில் மரசெக்கு கடலை எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . சிறிதளவு உப்பு , மிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் மற்றும் அம்மிகல்லில் நசுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். * கடைசியாக வேக வைத்த மட்டனை நீருடன் முழுவதுமாக சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . நன்றாக கொதி வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
* இப்போது சூப்பரான மட்டன் ரசம் ரெடி.