இத்தாலியின் பெகர்மோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெகர்மோவில் வாழ்ந்து வந்த வர்ணகுலசூரிய சஞ்சீவ பிரதீப் பெர்னாண்டோ என்ற 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சஞ்சீவ பிரதீப் தனிப்பட்ட நோக்கத்திற்காக சைக்கிளில் பயணித்த போது அதே திசையில் சென்ற பெரிய லொறியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பேர்கம போக்குவரத்து பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சஞ்சீவ பிரதீப் அவசர அம்பியுலன்ஸ்கள் சம்பவ இடத்தை நெருங்கும் முன்பே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த சஞ்சீவ பிரதீப் இலங்கையின் மாரவில பிரதேசத்தை வசிப்பிடமாகவும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தாலியில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.