இலங்கையில் தேங்காய் திருடிய நபர் ஒருவருக்கு நீதிமன்றம் ஓராண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குறித்த நபர் இதற்கு முன்னர் குற்றச் செயல்களில் ஈடுபடாத காரணத்தினால் இந்த ஓராண்டு கால சிறைத்தண்டனை பத்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடரப்பட்டுள்ள வழக்கு
திவுலபிட்டிய – கெஹல்எல்ல பகுதியில் அமைந்துள்ள தோட்டமொன்றிற்குள் அத்துமீறி பிரவேசித்து 1200 ரூபா பெறுமதியான 20 தேங்காய்களை திருடியதாக குறித்த நபருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் கெஹல்எல்ல பகுதியைச் சேர்ந்த சுமித் ரஞ்சித் ஜயலத் என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.