கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வரும் நிலையில் இன்றைய தினம் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை என கூறப்படுகின்றது.
மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அமெரிக்க வங்கிகள் திவாலானதும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்ததால் விலை உயர்வை சந்தித்ததாக கூறப்பட்டது.
இன்றைய தங்கவிலை நிலவரம்
அந்தவகையில் இன்று சென்னையில் , 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,595 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 44,760 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 4,583 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ. 36,664 ஆகவும் விற்பனையாகிறது.
அதேசமயம் வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.