ஜெர்மனி நாட்டில் மாணவர்களுக்கு 200 யுரோ வவுச்சர் வழங்கப்பட இருக்கின்றது. ஜெர்மனிய அரசாங்கமானது கொரோனா காலங்களில் இளைஞர் யுவதிகள் பலர் மனோவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
அதன் காரணத்தினால் இளைஞர் யுவதிகளுக்கு இவ்வருடத்தில் ஒரு 200 யுரோ வவுச்சரை வழங்குவதற்கு தீர்மானித்து இருந்தது.
அதன்படி இந்த வவுச்சர் 1.6.2023 இல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.
அதாவது இந்த புதிய நடைமுறை மூலம் 18 வயதை எட்டிய ஒரு நபர் 200 யுரோ வவுச்சரை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த வவுச்சர் மூலமாக இவர்கள் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கும், பட மாளிகைக்கு செல்வதற்கும் அல்லது சில காட்சிகளை பார்ப்பதற்கு பயன்படுத்த முடியும் என்றும் தெரியவந்திருக்கின்றுது.
மேலும் இந்த 200 யுரோ வவுச்சரை டிஜிடல் முறையில் விண்ணப்பம் செய்ய முடியும் என்றும் தெரியவந்துள்ளது.