பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து மத்திய வங்கி ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஒரு ஊடகக் குறிப்பில், இலங்கை மத்திய வங்கியானது தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடத்துவதாகத் தெரிவித்து சில நிறுவனங்களின் பெயர் விபரங்களை பொதுமக்களின் அவதானத்திற்கு கொண்டு வந்துள்ளது.