கொஹுவளை மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அவசர அறிவித்தல் விடுத்துள்ளனர்.
அதன்படி குறித்த மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜூலை 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
எனவே, கொஹுவளை சந்திக்கு அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.