டெங்கு நோய் பரவும் வகையில் காணி பாதுகாப்பற்றதாக உள்ளதென வைத்திய அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டால் அந்த காணிகள் சுவீகரிக்கப்படும் என, நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் அஜித் விதானகே தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், கொத்தட்டுவ சுகாதார வைத்திய பிரிவுக்கு மாத்திரம் பொருந்தும் விசேட அவசர இலக்கமொன்று நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் அஜித் விதானகே.
“அந்த தொலைபேசி எண் மூலம் 24 மணி நேரமும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நேரத்தில் தீர்வுகளை வழங்கக் கூடியவர்களுக்கு தீர்வுகள் வழங்கப்படும். சில பிரச்சனைகளுக்கு 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு பரவும் வகையில் கைவிடப்பட்ட காணிகள் இருந்தால், அது பாதுகாப்பற்றதாக உள்ளதென சுகாதார வைத்திய அதிகாரி அடையாளம் கண்டால், அந்த நிலங்கள் கையகப்படுத்தப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.