முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரோஹித்த போகொல்லாகம இதற்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.



















