மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் பெண்கள் சிறைச்சாலையொன்றில் நடந்த மோதல்களினால் குறைந்தபட்சம் 41 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டெகுசிகால்பாவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சிறைச்சாலையில் செவ்வாய்க்கிழமை (20) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 41 பெண்கள் உயிரழழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
எனினும், இறந்தவர்கள் அனைவரும் கைதிகளா என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார். சம்பவத்தில் காயமடைந்த 5 பெண்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டடதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.