யாழ்ப்பாண மாவட்டம் அனலைதீவு பகுதியில் கனேடிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனலைதீவு வைத்தியசாலை ஒன்றில் கடமையில் இருந்த பெண் வைத்தியருடன் முறை தவறி நடந்ததுடன் வைத்தியசாலை தளபாடங்களிற்கும் சேதம் விளைவித்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று (20-06-2023) இரண்டு பொலிஸாருடன் வைத்தியசாலைக்கு சென்ற அவர் இவ்வாறு மோசமாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்ததுடன் ஆதாரமாக வைத்தியசாலை சிசிரிவி காட்சிகளையும் கையளித்தது.
இதனடிப்படையில் கனேடிய நபர் கைது செய்யப்பட்டதுடன் அவருடன் சென்றதாக கூறப்படும் இரண்டு பொலிஸார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது.