கம்பஹாவில் மது போதையில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா வைத்தியசாலை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள காவல் துறைப்பிரிவில் கடமையில் ஈடுபட்டிருந்த போதே அவர் இச் செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
வைத்தியசாலையின் நிர்வாகப்பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமையவே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள காவல் துறை உத்தியோகத்தர் தொடர்பில் கம்பஹா காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




















