யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை (29) காலை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது ஆரியகுளம் நாகவிகாரைக்கு சென்ற மைத்திரிபால சிறிசேன வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நாக விகாரதிபதியை சந்தித்தார்.
யாழிற்கு முன்னாள் ஜனாதிபதி திடீர் விஜயம்! | Former President S Sudden Visit To Jaffna
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
யாழிற்கு முன்னாள் ஜனாதிபதி திடீர் விஜயம்! | Former President S Sudden Visit To Jaffna
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் மைத்திரிபால சிறிசேனா, இன்றைய தினம் முதல் மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும்,சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.




















