இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று நேற்றையதினம் (01.07.2023) பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் 67 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,
இந்தோனேசியாவின் யோகியாகா்த்தா மாகாணம், பான்டுல் என்ற கிராமத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பெருமளவிளான வீடுகள் சேதம்
86 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள், கட்டடங்களில் இருந்து திறந்தவெளியை நோக்கி ஓடியுள்ளனர்.
இதேவேளை இந்த நிலநடுக்கத்தில் சுமாா் 93 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அயல் பிரதேசங்களுக்கும் இதன் பாதிப்பு உணரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.