ஜெர்மனியில் குழந்தைகளுக்கான விஷேட நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
ஜெர்மனி நாட்டினுடைய சமூக நல அமைச்சர் ஈஸா பௌஸ் அவர்கள் குழந்தைகளுடைய ஏழ்மை நிலையை நீக்குவதற்காக ஓர் நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் ஏற்கனவே தெரிவித்து இருக்கின்றார்.
இவ்வாறு கிண்ட குர்ஷிகர் என்று சொல்லப்படுகின்ற இந்த புதிய நிதி திட்டம் அமுலுக்கு வருமானால் குழந்தைகள் ஏழ்மை நிலையில் இருந்து விடுவிக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.
இந்நிலையில் இந்த கிண்டர் குர்ஷிகர் என்று சொல்லப்படுகின்ற குழந்தைகளுக்காக வழங்கப்படுகின்ற நிதியத்துக்கு 12 பில்லியன் யுரோக்கள் தேவைப்படுவதாகவும் இதேவேளையில் இந்த புதிய திட்டத்துக்கு நிதி அமைச்சர் கிறிஸ்டியான் லின் அவர்கள் தனது ஆதரவை இதுவரை தெரிவிக்கவில்லை என தெரியவந்துள்ளது.